பெருமழையை கொண்டுவருகிற ஜெபம்

பாஸ்டர். டெரி பிரகாசம், 12-08-2018

இந்த வாரம் பாஸ்டர் டெர்ரி பிரகாசம் அவர்கள் ஜெபத்தின் வல்லமையைக் குறித்து பிரசங்கம் செய்தார். அதற்கு ஆதாரமாக 1 இராஜாக்கள் 18:19-45-ல் தீர்க்கதரிசி எலியாவைக் குறித்தும் அவர் ஜெபத்தின் மூலம் ஆண்டவரோடு எவ்வளவு நெருக்கமாய் இருந்து கர்த்தரின் வசனத்தின் அடிப்படையில் ஜெபித்து, ஜெபத்தில் விசுவாசத்தோடும் விடாமுயற்சியோடும் எவ்வாறு காத்திருந்தாரென்று நான்கு தலைப்புகளில் தியானித்தார். யாக்கோபு 5:17-ல் சொல்லியுள்ளபடி “எலியா நம்மைப்போல பாடுள்ள மனிதனாய் இருந்தும் மழை பெய்யக்கூடாது என்று கருத்தாய் ஜெபம் பண்ணிய போது மூன்றரை வருடங்கள் மழை பெய்யாமலிருந்தது. எலியா மீண்டும் ஜெபம் செய்தபொழுது இஸ்ரவேல் தேசத்தில் மழை பெய்தது.” எலியா ஒரு தீர்க்கதரிசி என்பதால் இந்த அதிசயம் நடைபெறவில்லை. எலியா தேவனோடு நெருங்கிய உறவாயிருந்தான். கர்த்தருடைய வசனத்தின் அடிப்படையில் தினந்தோறும் கருத்தாய் ஜெபித்து வந்தான். தான் செய்த ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் வரை விசுவாசத்தோடு காத்திருந்து தொடர்ந்து விடாமுயற்சியோடு கர்த்தரை பற்றிக் கொண்டிருந்தான்.

பாவம் நிறைந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்வது எப்படி?

சங்கை .டேவிட் பிரகாசம், 09-09-2018

அநீதி நிறைந்த, பாவம் நிறைந்த உலகில் நம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செய்தித்தாள்களை திருப்பினால் உலகம் எவ்வளவு பயங்கரமானது என்று பார்க்க முடிகிறது. சிறு பிள்ளைகளுக்கு பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது. தாய், தான் பெற்ற பிள்ளைகளை கொலை செய்யும் நிலை மற்றும் சொத்திற்காக, பெற்றோரையே கொலை செய்யும் நிலை நம் நாட்டில் வந்து விட்டது. ஓரினச் சேர்கை என்னும் பாவச் செயலுக்கு சுதந்திரம் கிடைத்த நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்விதமாக கர்த்தருடைய பிள்ளைகளை சாத்தான் அவனுடைய வலையில் விலதள்ளுகிறான்.கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், இதிலெல்லாம் விழுந்து போகாதபடிக்கு அதை தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைக்கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

தேவனால் கூடாத காரியம் உண்டோ?

பாஸ்டர். டெரி பிரகாசம், 16-09-2018

நாம் ஒவ்வொருவரும் இந்த நாட்களில் எத்தனையோ பிரச்சனைகள், கஷ்டங்கள், தொல்லைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். இந்த கஷ்டங்கள், பிரச்சனைகளை நம்முடைய சுயபெலத்தினாலும், சொந்த அறிவினாலும் கையாண்டு முடித்துவிடலாம், தீர்த்து விடலாம் என்று நினைப்போமானால் அது ஒருபோதும் முடியாது. வேதாகமத்தில் சாராள் தன்னுடைய 90-வது வயதில் பிள்ளையைப் பெற்றெடுத்தாள் என்று பார்க்கிறோம். அது சாராளுடைய முயற்சியல்ல. தேவன் அபிராகாமிடம் சாராளின் உற்பவக் காலகட்டத்தில் பிள்ளை பெறுவாள் என்று கூறும்போது சாராள் அதை கேட்டு நான் கிழவியாகிவிட்டேன் இப்போது எனக்கு பிள்ளைபேரு நடக்குமோ என்று தன் மனதிற்குள் நினைத்து நகைத்தாள். அதை தேவன் கண்டு சாராளை பார்த்து ஏன் நகைக்கிறாய் " தேவனால் ஆகாத காரியம் உண்டோ ? " என்று சாராளை பார்த்து கேட்கிறார். சாராள் தனக்கு பிள்ளைபேரு நடைபெறாது என்று தன்னுடைய சூழ்நிலையை கண்டு சொல்கிறாள், ஆனால் நம் தேவன் நம்முடைய சூழ்நிலைகளை மாற்றுகிற தேவன். நாம் நம்முடைய பிரச்சினைகளை நம்முடைய பார்வையில் பார்க்காமல் தேவனுடைய பார்வையில் பார்க்க கற்று கொள்ள வேண்டும்.

கடன்களை ரத்து செய்கின்ற தேவன்

சங்கை .டேவிட் பிரகாசம், 23-09-2018

இந்த நாட்களில் வாழ்கின்ற நம் எல்லாருக்குமே அடைக்க முடியாத கடன் இருக்கிறது. நம்முடைய எல்லா கடன்களையும் அடைக்க தேவன் வல்லவராயிருக்கிறார். இப்படியாக வேதாகமத்தில் தேவன் கடன்களோடு இருந்தவர்களை விடுவித்த 7 கதா பாத்திரங்களை இங்கே பார்ப்போம். 1. 2ராஜா. 6 : 5 - 7 தவறி தண்ணீரில் விழுந்த கோடரியை மீண்டும் கிடைக்கச் செய்கிறார். 2. நெகேமியா 5:2 – 9> 11> 12 இஸ்ரவேல் ஜனங்களுடைய கடன்களை ஒரே நாளில் அடைக்க செய்கிறார். 3. யாத். 3:21>22 430 வருடம் எகிப்திலே அடிமைகளாயிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒரே இரவிலே அவர்கள் வேலை செய்ததற்குரிய சம்பளத்தை கிடைக்கச் செய்கிறார். 4. 2ராஜா. 4 : 7 இருப்பதை கொண்டு செய்ய வல்லவர். எழை விதவையினுடைய கடன்களை எண்ணெயை விற்று அதனைக் கொண்டு அடைக்க செய்கிறார். 5. உபா . 15 : 1> 2 எழாம் வருஷத்தில் எல்லா கடன்களையும் ரத்து செய்கிறார். 6. பிலோமோன் வீட்டு வேலைக்காரன் ஒநேசிமுவினுடைய கடன்களை மன்னிக்கிறார். 7. மத்தேயு 17 : 24 - 27 மீனின் வாயிலிருந்து எடுத்த வெள்ளிக்காசைக் கொண்டு வரிப்பணம் என்ற கடனை அடைக்க செய்கிறார். இதே போல தேவன் நம்முடைய வாழ்விலுள்ள பாவங்கள்> சாபங்கள் என்கின்ற கடனை சிலுவையிலே ரத்து செய்து விட்டார். இனி நமக்கு என்றும் விடுதலை. ஆமென்!

இயேசு கிறிஸ்துவின் இராஜரீக சுதந்திரத்தோடு வாழ்வது எப்படி?

Joanne Moody, 30-09-2018

அன்பான தேவ பிள்ளைகளே நாமெல்லாரும் கிறிஸ்துவை ஏற்று கொள்வதற்கு முன்பு இரக்கம் பெறாதவர்களாய், தேவனுடைய ஜனம் என்று சொல்ல முடியாதவர்களாய் வாழ்ந்து வந்தோம், இயேசுவை ஏற்று கொண்ட பின்போ, இரக்கம் பெற்றவர்களாய், தேவனுடைய ஜனம் என்றும் பரலோகத்திலுள்ள மேன்மைகளை பூமிக்கு கொண்டு வருகிறவர்களாய், இருளில் இருக்கிற ஜனங்களை வெளிச்சத்தினிடத்திற்கு கொண்டு வருகிறவர்களாய், அடைக்கப்பட்ட கதவுகளை திறக்கிற திறவுகோலாய் நாம் காணப்படுகிறோம். குமாரன் நம்மை விடுதலையாக்கினால் மெய்யாகவே நாம் விடுதலையாகிறோம். நம்முடைய பழைய சுபாவங்களாகிய கோபம், மூர்க்கம், பொறாமை, தூஷணமான வார்த்தைகள், வம்பு வார்த்தைகள் இவைகளை எடுத்துப்போட்டுவிட்டு, அன்பு, மகிமை, பெலத்தின் மேல் பெலன், தயவு, தாழ்மை, சுயகட்டுப்பாடு இவைகளை நாம் தரித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய திறமையைப் பொறுத்து கர்த்தரின் அபிஷேகம் நம்மேல் வருகிறது. தாக்கு பிடித்து, குறுகலான மனதோடு கூட இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து விடலாம் என்று அல்ல, பயத்த்தோடு அல்ல நாம் ஒவ்வொருவரும் இராஜரீக வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆமென்!

நம் தகப்பனின் சுதந்திரங்கள்

சங்கை .கெத்சியா பிரகாசம், 07-10-2018

இந்த உலகத்தில் நம் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் நமக்கு நிரந்திரம் கிடையாது. நமது பரம தகப்பன் தருகிற சுதந்திரமே எப்போதும் நிலைத்து நிற்கும். இதற்கு ஆதாரமாக வேதத்தில் எண்ணாகமம் புத்தகத்தில் 27 ஆம் அதிகாரம் 1 - 7 வசனங்களில் செலொப்பியாத்தின் குமாரத்திகள் தன் தகப்பனுடைய சுதந்திரத்தை உரிமையோடு கேட்டு கொள்கிறார்கள்.. அதே போல நாமும் நம் தகப்பனாகிய இயேசு கிறிஸ்துவிடம் நமக்குரிய சுதந்திரங்களை உரிமையோடு கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நம் தேவன் இந்த பார்தலத்திற்கு சொந்தகாரர் ஆவார். அவர் நம்மை அவருடைய தோளின்மீது சுமக்கின்றார், சுதந்தரங்களை தருகின்றார். தேவனுடைய காரியத்துக்கு நாம் முதலிடம் கொடுக்கும்போது நமக்கு தேவையான எல்லா நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் நமக்கு கூட்டி தருகிறார். தற்காலிக சுதந்திரத்தை அல்ல, நிரந்தரமான, அழியாத சுதந்திரத்தை தருகிறார். நாம் நம் தேவனிடம் சாதாரண சுதந்திரத்தை, ஆசீர்வாதத்தை கேட்காமல், நம்முடைய தகுதிக்கு மிஞ்சி, மேலான, உயர்வான சுதந்திரத்தை, ஆசீர்வாதத்தை கேட்க வேண்டும். தேவன் நமக்கு சொல்லியிருக்கிற சுதந்திரத்தை, ஆசீர்வாதத்தை தருகின்ற வரை நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவர் நமக்கு சொன்னதை செய்யும் வரை நம்மை கைவிடாத நல்ல தகப்பனாயிருக்கிறார். ஆமென்!

ஆசீர்வாதமான ஒருவன்

சுவிசேஷகர். ஆல்பர்ட் சாலமோன், 14-10-2018

கர்த்தருக்கு பிரியமான தேவ பிள்ளைகளே இந்த செய்தியிலிருந்து மூன்று கேள்விகளை தேவன் நம் முன் வைக்கிறார்? 1. தேவன் நம்மை குறித்து சாட்சி கொடுப்பாரா? 2. நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்கள் நம்மை குறித்து சாட்சி கொடுப்பார்களா? 3. இந்த சமுதாயம் நம்மை குறித்து சாட்சி கொடுக்குமா? 1 சாமு. 16 : 1 இந்த வசனத்தில் கர்த்தர் தாவீதை குறித்து ஈசாயின் குமாரரில் ஒருவனாகிய தாவதை நான் ராஜாவாக தெரிந்து கொண்டேன் என்று சாமுவேல் தீர்க்கதரிசியிடம் கூறுகிறார். நம்மை குறித்து கர்த்தர் எவ்வாறு சாட்சி கொடுப்பார் என்று தேவ சமூகத்தில் அமர்ந்து நம்மை நாமே அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். 2. 1 சாமு. 16 : 11 நம்மை பற்றி நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு சாட்சி கொடுக்கிறார்கள்? தாவீதைக் குறித்து அவன் தகப்பன் ஈசாய், இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கிறான் என்று சாமுவேலிடம் சொல்லுகிறான். உங்கள் குடும்பத்தில், நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம், எத்தனை மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வருவீர்கள் போன்ற அனைத்து வித தகவல்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அறிந்துள்ளார்களா? உங்களை குறித்து, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ன மாதிரியான சாட்சி கொடுக்கிறார்கள் என்று அறிந்து வைத்துள்ளார்களா? 3. 1 சாமு. 16 : 18 இந்த சமுதாயம் நம்மை குறித்து எவ்வாறு சாட்சி கொடுக்கிறது? உங்கள் அருகாமையில் வசிப்பவர்கள், உங்கள் வீட்டின் வேலைகாரர்கள், சமுதாயம் எப்படிப்பட்ட சாட்சியை கொடுக்கிறது. சாமுவேல் தாவீதை குறித்து, இவன் வாசிப்பதில் தேறினவன், பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரிய சமர்த்தன் சவுந்தரியமுள்ளவன், கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றான்.

மேய்ப்பர்கள் தரக்கூடிய 7 ஆசீர்வாதங்கள்

சங்கை .டேவிட் பிரகாசம், 28-10-2018

கர்த்தருக்கு பிரியமான தேவ பிள்ளைகளே இங்கு மேய்ப்பனை குறித்த விசேஷ செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் தாவீது தன் ஆடுகளை வனாந்திரத்தில் மேய்த்துக் கொண்டிருந்தபோது 23 ஆம் சங்கீதத்தை பாடலாக பாடுகிறார். இந்த சங்கீதத்திலிருந்து மேய்ப்பன் தருகிற 7 ஆசீர்வாதங்களை பார்க்கலாம். 1.கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். கர்த்தர் நம் மேய்ப்பராய் இருக்கும்போது குறைவு என்பதே இருக்காது. நம் தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்கிறவராயிருக்கிறார். நமக்கு ஒரு நல்ல மேய்ப்பனாய் நம்முடைய பாஸ்டர் ஐயா இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் தேவ வார்த்தைகள் மூலம் நன்றாக நம்மை போஷித்து வழிநடத்துகிறார். 2.மேய்ப்பன் போஷிக்கிறவராய் இருக்கிறார். வேதத்திலுள்ள 66 புல்வெளிகளிலும் போய் எது நல்ல சத்தான உணவோ அதை நமக்கு தருகிறார். பலிபீடத்திலிருந்து வருகிற வார்த்தை நமக்கு ஜீவனை தருகிறது. 3. மேய்ப்பன் இளைப்பாறுதலை தருகிறவராய் இருக்கிறார். நாம் பிரச்சனையோடு இருக்கிற வேளையில். வியாதியின் மத்தியில் தேவன் நம்மை தேற்றி நமக்கு இளைப்பாறுதலை தருகிறார். அவருடைய கோலும் தடியும் நம்மை தேற்றுகிறது.

neUf;fj;jpd; fhyj;jpy; ehk; nra;a Ntz;ba fhhpaq;fs;

சங்கை .டேவிட் பிரகாசம், 11-11-2018

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு வாழ்க்கையில் பல நெருக்கங்கள் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் அதை கர்த்தருடைய பெலத்தினால் மேற்கொள்கிறோம். இவ்விதமாக நம்முடைய நெருக்கத்தின் காலத்தில் நாம் செய்ய வேண்டிய 5 காரியங்கள் என்ன என்பதை பார்க்கலாம். 1. நெருக்கத்தின் காலத்தில் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ண வேண்டும். 1 இராஜா..19 : 3, 14 இந்த வசனங்களில் கர்த்தருக்கு பயந்து வாழ்ந்த எசேக்கியா இராஜாவிற்கு விரோதமாக அசீரியா இராஜா படையெடுத்து வருகிறான். எசேக்கியா இராஜாவை மிக கேவலமாக திட்டுகிறான். எசேக்கியா இராஜா கர்த்தருடைய சமூகத்தில் போய் கண்ணீரோடு ஜெபிக்கிறான். கர்த்தர் ஜெபத்தை கேட்டு கர்த்தருடைய தூதனைக் கொண்டு அசீரியரின் பாளயத்திலே லட்சட்த்தொன்பதாயிரம் பேரை சங்கரிக்கும் படி செய்தார். அதுமாத்திரமல்ல எசேக்கியா இராஜா மரணத்துக்கேதுவான வியாதியினால் நெருக்கப்படுகிற வேளையில் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறான். கர்த்தர் ஜெபத்தை கேட்டு, ஏசாயா தீர்க்கதரிசியிடம் நல்ல செய்தி சொல்லி அனுப்புகிறார். வியாதியை சுகமாக்கி 15 வருடத்தை கூட்டி தருகிறார். எசேக்கியா இராஜாவின் விண்ணப்பத்தை கேட்ட தேவன் உங்களுடைய கண்ணீரின் ஜெபத்தை கேட்க வல்லராயிருக்கிறார். 2. நெருக்கத்தின் காலத்தில் தன்னை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். 1 சாமு. 30 : 3,4,6 இந்த வசனங்களில் சிக்லாக்கிலே தாவீதினுடைய மனைவிகள், அவனுடைய குமாரத்திகள் எல்லாரும் சிறைபிடிக்கப்பட்டு போனதினிமித்தம் தாவீது மிகவும் சத்தமிட்டு அழுகிறான். மிகவும் நெருக்கப்படுகிறான். இந்த வேளையிலே தாவீது தன்னை திடப்படுத்திக்கொண்டான். நெருக்கத்தின் வேளையில் சோர்ந்து போகக்கூடாது.திடப்படுத்திக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து அறிக்கை செய்ய வேண்டும். நீங்கள் இழந்த எல்லாவற்றையும் ஆண்டவர் திருப்பி கொடுப்பார். 3. நெருக்கத்தின் காலத்தில் தன்னை தாழ்த்த வேண்டும். 2 நாளா. 33 : 11 - 13 இந்த வசனங்களில் அசீரியா இராஜாவின் சேனாதிபதிகள் மனாசேயை வெண்கல சங்கிலிகளால் கட்டி பாபிலோனுக்கு கொண்டு போனார்கள். மனாசே நெருக்கத்தின் வேளையில் கர்த்தரிடம் கெஞ்சி தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்துகிறான். கர்த்தர் மனமிரங்கி திரும்ப எருசலேமிலுள்ள ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கத்திலே கர்த்தரிடம் தாழ்த்தும்போது கர்த்தர் விடுதலை செய்கிறார். 4. நெருக்கத்தின் காலத்தில் கர்த்தரிடம் திரும்ப வேண்டும். 2 நாளா. 15 : 2 - 7 வசனங்களில் நாம் பார்க்கும் பொது இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை விட்டு பின்வாங்கி போன வேளையிலே அவர்களுக்கு பல நெருக்கம், பாடுகள் வருகின்றது. மிகவும் கலங்கி போகிறார்கள். அவர்கள் மனந்திரும்பி மீண்டும் கர்த்தரிடம் திரும்பி வருகிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு விடுதலை தருகிறார். உங்களுடைய பெலவீனத்திலே அவருடைய பெலன் தாங்குகிறது. உங்களுக்கு வரும் பாடுகள், நெருக்கம், இலேசானது. அதி சீக்கிரம் நீங்கி விடும். உங்கள் பாடுகள் நெருக்கங்களுக்குப் பதிலாக கர்த்தர் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை தருகிறார். கர்த்தர் உங்களுடைய வாழ்வில் நெருக்கங்களை அனுமதிப்பதற்கு காரணம் உங்களுடைய குறுகலான வாழ்விலிருந்து உங்களை விரிவு படுத்த, பெரிதாக்க, உங்களுடைய வாழ்வில் இரட்டிப்பான ஆசீர்வாதங்கள் பெருகட்டும். ஆமென்.

cd; tpRthrk; cz;ikahdjh? Nghypahdjh?

சங்கை .டேவிட் பிரகாசம், 18-11-2018

கிறிஸ்துவ வாழ்க்கை என்பது விசுவாசத்தை சார்ந்தது, 1 பேதுரு 1:7 ல் உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு புகழ்ச்சியும், கனமும் மகிமையுண்டாக காணப்படும். கிறிஸ்துவின் பேரில் வைக்கும் விசுவாசம் அறிவை சார்ந்தது அல்ல. அது நம்பிக்கையை சார்ந்தது. விசுவாசம் என்பது விசுவாசிகளின் விலை மதிக்க முடியாத சொத்து. தேவன் மேல் விசுவாசம் வைப்பது என்பது, அவரை குறித்து சொல்வதை அப்படியே நம்புவது. உலகத்தின் பேரில் நம்பிக்கை வைப்பதை விட தேவன் பேரில் நம்பிக்கை வையுங்கள்,. நம் கடையில் பொருள் வாங்கும் பொது இது தரமுள்ளதா அல்லது தரமற்றதா என சோதித்து பார்த்து வாங்குகிறோம். ஆனால் ஆண்டவர் மேல் வைக்கும் விசுவாசம் விலையேறப்பெற்றது. ஒரு முறை தேவன் யோபுவின் விசுவாசம் சோதிக்கப்பட அனுமதி அளித்தார். யோபு ஆண்டவர் மேல் வைத்த விசுவாசம் விலையேறப்பெற்றதாய் இருந்தது. சிலர் இயேசுவை ஆசீர்வாதங்களுக்காக, நன்மைக்காக, விடுதலைக்காக மட்டும் ஆண்டவரிடம் விசுவாசம் வைக்கிறார்கள். உண்மையான விசுவாசம் பரீட்சிக்கப்பட்டு, சோதிக்கப்படும்போது சுத்த பொன்னாக விளங்குகிறது. 1. விலையேறப்பெற்ற விசுவாசம். அப்போஸ்தலனாகிய பேதுரு தனது நிருப்பதில் 4 காரியங்களை மிக விலையேறப்பெற்றது என்று குறிப்பிட்டு இருக்கிறார். 1. விலையேறப்பெற்ற விசுவாசம் 2. விலையேறப்பெற்ற இரத்தம் 3. விலையேறப்பெற்ற கல். 4, விலையேறப்பெற்ற வாக்குத்தத்தம் உலகில் நாம் விலையேறப்பெற்றது என்று நமது பிள்ளைகள், நமது சொத்து மற்றும் பொன் ஆகியவற்றை கூறுகிறோம். ஆனால் பேதுரு விசுவாசத்தை வேதத்தில் பொன்னுக்கு ஒப்பிட்டு சொல்கிறார். பொன் அழிந்து போகும். பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்றது நமது விசுவாசம். நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் வளர, பெருக தேவன் விரும்புகிறார். இந்த விசுவாச கப்பலை சேதப்படுத்தக்கூடாது. 2. புடமிடப்படும் விசுவாசம் பொன் அக்கினியினால் புடமிடப்படுவது போல நம்முடைய விசுவாசமும் புடமிடப்படுகிறது. பொன்னை அக்கினியினால் புடமிடப்படப்படும் போது, வேண்டாத அசுத்தங்கள் சுடப்படுகிறது. பின்னர் சுத்த பொன்னாக காணப்படுகிறது. அதே போல நம்முடைய வாழ்விலும் பல விதங்களில் கர்த்தர் நம்மை புடமிடுகிறார். நம்மை சுத்தப்படுத்துகிறார். வேண்டாத சுபாவங்களை, மாம்ச குணங்களை சுட்டெரிக்கிறார். என் தேவன் நம்முடைய வாழ்வில் பாடுகளை அனுமதிக்கிறார். 1.நமது வாழ்வில் இருக்கும் களிம்புகள், வேண்டாத காரியங்களை அகற்ற.2. மற்றவர்கள் வைக்கும் நம்பிக்கையிலிருந்து விடுவிக்க. 3.சுயம் சுட்டெரிக்க. 4. நமது சுபாவத்தை இயேசுவை போல மாற்ற. நம் வாழ்வில் போராட்டம், பாடுகள் வந்தாலும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். திராணிக்கு மேலாக சோதிக்க விடமாட்டார். தப்பித்துக்கொள்ள ஒரு போக்கையும் உண்டாக்குவார். ஒருவேளை கர்த்தர் என்னை தப்புவியாமற் போனாலும் அவர்மேல் விசுவாசமாயிருப்பேன் என்று சொல்ல வேண்டும்.

தெய்வீக சந்திப்பு

பாஸ்டர். டெரி பிரகாசம், 25-11-2018

இந்த செய்தியில் தேவனோடு நமக்கு இருக்கும் தெய்வீக சந்திப்பை குறித்து இங்கே பார்க்க்கலாம். யாத். 3 : 1 - 9 ஆகிய வசனங்களில் மோசேக்கும் தேவனுக்கும் உள்ள தெய்வீக சந்திப்பை இங்கே பார்க்கலாம். மோசேக்கு தேவன் தம்மை வெளிப்படுத்தினதுபோல நமக்கும் வெளிப்படுத்துவார். மோசே 40 வருடம் வனாந்திர வாழ்க்கையை அனுபவித்தார். அந்த சூழ்நிலையில் அவருக்கு தேவனோடு ஒரு சந்திப்பு ஏற்படுகிறது. மோசே எல்லா கலைகளையும் கற்று தேறினவன். ஆனால் திக்குவாயாய் இருந்தான். தேவன் அவனுக்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும்படியாய் பொறுப்பு கொடுக்கிறார். மோசே தேவனை பார்த்து நான் திக்கு வாயும், மந்த நாவுடையவன். என்னால் முடியாது என்கிறான். 1. மோசே நீடிய சாந்தமுள்ளவனாயிருந்தான். மோசேக்கு வனாந்திரமான அனுபவம் வந்தபோதிலும் கர்த்தருக்குள் சாந்தமாயிருந்தான் தேவன் மோசேயைப் பார்த்து என் மகிமை உனக்குள் வெளிப்படும் என்கிறார். மோசேக்கு என்ன கிரியை செய்தாரோ அதே கிரியை நமக்கும் செய்வார். 2.மோசே உண்மையுள்ளவனாயிருந்தான் தன் மாமனாருடைய ஆடுகளை மேய்ப்பதில் உண்மையாயிருந்தான். 40 வருடம் உண்மையாயிருந்தான் மோசே கொஞ்சத்தில் உண்மையாயிருந்தபடியால் 30 லட்சம் ஜனங்களை தேவன் மோசேயின் கையில் ஒப்புக்கொடுத்தார். எப்பொழுதும் சும்மா இருக்கவே கூடாது. எலிசா உழுது கொண்டிருக்கும் போது எலியாவின் சால்வை எலிசாவின் மேல் விழுந்தது. உண்மையாயிருக்கும் போது தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். 3. மோசே தனியாக இருந்தான் .மோசே தனியாக இருக்கும்போது தேவன் அவனோடு பேசுகிறார். ஜனக்கூட்டத்தின் இரைச்சலில் ஆண்டவருடைய சட்டத்தைதை கேட்க முடியாது. தேவன் நம்மோடு தனித்து இருக்கும்படி வழி வகுக்கிறார். முதலாவது கர்த்தருடைய பாதத்தை தேடவேண்டும். எல்லாம் நமக்கு கொடுக்கப்படும். தனித்து இருக்குபோது நம்மோடு பேசுகிறார். அவர் மேல் உள்ள பசி, தாகம், அவரிடம் கிட்டிசேர்க்கிறது. .முட்செடியில் தேவன் மோசேயோடு பேசுகிறார். முட்செடியின் அனுபவம் தேவனோடு சந்திப்பை ஏற்படுத்துகிறது. கர்த்தருக்கு பயந்தான். 2 விதமான பயங்கள் இருக்கிறது. வெளிப்படையான பயம். உள்ளான பயம். தேவன் மேல் நாம் வைத்திருக்கிற கனம் வெளிப்படையான பயம் ஆண்டவருடைய மகிமை சீனாய் மலையின் மேல் வெளிப்பட்டது. தேவன் மோசேயோடு முகமுகமாய் பேசினார். மோசேயைக் குறித்து புதிய வெளிப்பாடு கிடைக்கிறது. மோசேயை பார்த்து இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று சொல்கிறார். தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவனுடைய முன்புறத்தையும், பின்புறத்தையும் பார்ப்பதற்கு மோசேக்கு கிருபை செய்திருக்கிறார். மோசெயினுடைய கடைசி நாட்களில் தேவனே தன் கையாலேயே அடக்கம் செய்கிறார். அந்த அளவிற்கு மோசேக்கும் , தேவனுக்கும் உள்ள சந்திப்பு தெய்வீகமாயிருந்தது. மோசேக்கும் தேவனுக்கும் உள்ள சந்திப்பு 30 லட்சம் ஜனங்களை வழிநடத்த ஏதுவாயிருந்தது கடைசியாக யோசுவாவைப்பார்த்து கர்த்தர் சொல்லுகிறார். நான் மோசேயோடு இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்று. அப்படி யானால். மோசேக்கும் தேவனுக்கும் உள்ள சந்திப்பு எவ்வளவு விலையேறப்பெற்றதாயிருந்தது. நமக்கும் தேவனுக்கும் உள்ள சந்திப்பு அப்படியாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்வில் வனாந்திரம் போன்ற அனுபவம் நம்மை தேவனோடு இன்னும் கிட்டி சேர வைக்கிறது. ஆணடவர் மேல் உள்ள பசி, தாக்கம் அவரிடம் நெருங்கச்செய்கிறது. நமக்கும், தேவனுக்கும் ஒரு தெய்வீக சந்திப்பு இருக்க வேண்டும். ஆமென்.

திட்டங்களில் மாற்றம்

பாஸ்டர். ஜான் பிரகாசம், 02-12-2018

இந்த நாட்களில் நாம் எல்லாருமே நம்முடைய வாழ்க்கையில் எல்லா காரியத்திலும் துல்லியமாக திட்டமிட்டு செயல்படுகிறோம். வேதாகமத்தில் லூக்கா 1 : 26 - 38 வசனங்களில் மரியாளைக் குறித்து நாம் பார்க்கிறோம். மரியாளிற்கும் யோசிப்பிற்கும் நிச்சயம் முடிந்து திருமணத்திற்கு காத்திருக்கிற வேளையில் தேவதூதன் மரியாளைப்பார்த்து நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாய். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று சொல்லுகையில் மரியாள் நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது என்று சொல்லுகிறாள். மரியாள் அவளுடைய திட்டத்தை மறந்து தேவனுடைய திட்டத்திரு ஒப்புக்கொடுக்கிறாள். நம்முடைய தேவன் நம்முடைய பாதைகளை செவ்வைப்படுத்துகிறவர். நம்முடைய திட்டத்தையே யோசித்து கொண்டிருந்தோமானால் நாம் தேவனுடைய திட்டத்தை இழந்து போய்விடுவோம். நம்முடைய திட்டங்கள் தேவனுடைய திட்டத்திற்கு தடையாக இருக்க கூடாது. 1. குறுக்கீடுகளுக்கான திட்டம்: மரியாளுடைய வாழ்வில் தேவன் குறுக்கிட்டார். குறுக்கிட்டதினால் இந்த உலகத்தின் ரட்சகரை பெற்றெடுக்கும் பாக்கியத்தை பெற்றாள். நம்முடைய வாழ்விலும் தேவன் குறுக்கிடும் போது பெரிய காரியங்களை செய்வார். 2. சிரமத்திற்கான திட்டம்: மரியாள் உலகத்தின் இரட்சகரை பெற்றெடுக்க கழுதையின் மேல் ஏறிப்போகிறாள். மரியாள் பல சிரமதிக்குள்ளான படியால் தெய்வீக கிருபையை பெறறாள். நம்முடைய வாழ்வில் வரும் சிரமங்களை சகிக்கும் போது அதற்கு பிறகு மிகப்பெரிய ஆசீர்வாதங்கள் நமக்கு காத்திருக்கிறது. 3. முடியாதவைக்கான திட்டம்: மரியாள் ஒரு கன்னிப்பெண். இவளால் எப்படி ஒரு குமாரனை பெறமுடியும். இதுதான் தேவனுடைய திட்டம். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை. அவரால் எல்லாம் கூடும். முடியாதவைகளை முடிக்க செய்கிற தேவன் நம் தேவன். எரேமியா 29 : 11 வசனத்தின் திறவுகோல்.என்னவென்றால் ‘நான்’ நான் என்றால் கிறிஸ்து. கிறிஸ்து நம்முடைய வாழ்வில் வரும்போது, அவர் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார். கீழாக்கமால் மேலாக்குவார். நமக்கு திட்டம் போட தெரியாது. நம்முடைய வாழ்வில் தேவனே திட்டமிடுகிறார். நம்முடைய திட்டம் மாறிப்போகும். தேவனுடைய திட்டம் ஒருநாளும் மாறாது. தேவன் நம்முடைய வாழ்வில் திட்டம் போடும்போது பிசாசின் திட்டம் ஒன்றுமில்லாமல் போய்விடும். இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்வில் பிசாசின் திட்டம் நிறைவேற வில்லை. இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணபட்டார். மூன்றாம் நாளில் மரணத்தின் அதிபதியாகிய பிசாசை ஜெயித்து நமக்காக மீண்டும் உயிர்த்தெழுந்தார். நம் மீது தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். தேவனுடைய திட்டம் நம்முடைய வாழ்வில் வரும்போது மகத்துவமான காரியங்களை நம்மால் செய்ய முடியும். ஆமென்.